பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
ஊத்துக்கோட்டை: வெலமகண்டிகை கிராமத்தில் உள்ள சீதாராமர் கோவிலில், வரும் 28ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. பென்னலுார்பேட்டை அடுத்த, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீராஞ்சநேய சுவாமி கோவில். இக்கோவில் வளாகத்தில் சீதாராமர் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, வரும் 28ம் தேதி, நவமி திதியில் சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை, 8:00 மணிக்கு சீதாராமர், லட்சுமணன், வீராஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின், 11:00 மணிக்கு சீதாராமர் கல்யாண உற்சவம் நடைபெறும்.