இடைப்பாடி : இடைப்பாடியில், மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இடைப்பாடியில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினார். நகராட்சி துணை சேர்மன் ராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், திருப்பணிக்குழு தலைவர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகத்தில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளின் அருளை பெற்றனர்.