பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
திருத்தணி: கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், வரும் 27ம் தேதி முதல், 29ம் தேதி வரை, சூரிய பூஜை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. அங்கு, மூலவர் ஆறுமுக சுவாமியின் மீது ஆண்டுதோறும், பங்குனி மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மட்டும், சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு, சூரிய பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில், வரும், 27ம் தேதி, காலை 6:05 - -6:15 மணிக்குள், முதல் நாளில் சுவாமியின் திருப்பாதம் மீதும், இரண்டாம் நாள், 28ம் தேதி காலை 6:05 - -6:15 மணிக்குள் சுவாமியின் திருமேனி மீதும், மூன்றாம் நாள், 29ம் தேதி காலை 6:05 - -6:15 மணிக்குள் சுவாமியின் சிரசு மீதும் சூர்ய ஒளிக்கதிர்கள் விழும். அப்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.