பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
திருத்தணி: ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு, கோதண்டராமர் கோவிலில், நேற்று உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமநவமி விழா திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான நெடும்பரம் கோதண்டராமர் கோவி லில், ராமநவமி விழா, கடந்த 18ம்தேதி துவங்கியது. தினமும் காலை, மாலை இரு வேளைகளில், உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஆறாம் நாளான நேற்று, காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. யானை வாகனம் தொடர்ந்து, உற்சவருக்கு திருமஞ்சனம், மாலையில், உற்சவர் அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை திருமஞ்சனம், மாலை யானை வாகனம்; நாளை, காலை திருமஞ்சனம், சூர்யபிரபை வாகனம், மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 29ம் தேதியுடன், இந்த விழா புஷ்பயாகத்துடன் நிறைவடைகிறது.