பதிவு செய்த நாள்
25
மார்
2015
12:03
கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், ஏப்., 3ல் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.வரும், 27ம் தேதி இரவு, 10 மணிக்கு கிராமசாந்தி நடக்கிறது. 28ல் காலை, 10 மணிக்கு கொடியேற்றம், மாலை, 4 மணிக்கு யாகசாலை பூஜை, 5 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், மாலை, 6 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.வரும், 29ல் மாலை, 5 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி தேர்வீதி உலா வருதல், மாலை, 6 மணிக்கு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. 30ல் மாலை, 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், 6 மணிக்கு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. வரும், 31ல் மாலை, 5 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், மாலை, 6 மணிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை, இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. ஏப்., 1ல் மாலை, 5 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. ஏப்., 2ல், 9 மணிக்கு சண்முகருக்கு சிகப்பு சாத்தி, காலை, 10 மணிக்கு கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம், பகல், 12 மணிக்கு அபிஷேகம், மாலை, 5 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல், மாலை 6 மணிக்கு சண்முகருக்கு வெள்ளை சாத்தி, இரவு 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. ஏப்., 3ல் காலை, 7 மணிக்கு மகன்யாச அபிஷேகம், 7.30க்கு திருப்படி பூஜை, 8 மணிக்கு சண்முகருக்கு பச்சை சாத்தி, காலை, 6 முதல் பகல், 1 மணி வரை காவடி, பால்குடங்கள், அபிஷேகங்கள், மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், மாலை 6 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. 4ல், 12 மணிக்கு பரிவேட்டை, இரவு, 8 மணிக்கு வள்ளி தெய்வானை, சமேத சண்முகப்பெருமான் மலர் பல்லாக்கில் நகர் வலம் வருதல். 5ல் காலை, 10 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், பகல் 12 மணிக்கு தெப்பத்திருவிழா, கொடி இறக்குதல், பகல் 1 மணிக்கு அபிஷேகம் மகா தீபாராதனை நடக்கிறது.செயல் அலுவலர் பாலமுருகன், திருப்பணிக்குழு தலைவர் ஈஸ்வரன், பரம்பரை அறங்காவலர்கள் ராமன், ராஜகோபால் ஆகியோர், ஏற்பாடுகளை செய்கின்றனர்.