பதிவு செய்த நாள்
25
மார்
2015
12:03
நாமக்கல்: செல்லப்பம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மார்ச் 25) குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, நேற்று தீர்த்தக்குடம் அழைப்புடன் துவங்கியது. இன்று (மார்ச் 25) மாலை, 4 மணிக்கு கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில், ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை (மார்ச் 26) காலை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.அதை தொடர்ந்து, பகல், 12 மணிக்கு அம்மனுக்கு எருமை கிடா பலியிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 27ம் தேதி மாலை, 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, இரவு 7 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.