பதிவு செய்த நாள்
25
மார்
2015
12:03
பாரிமுனை: ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று பங்குனி உத்திர கொடியேற்றம் நடைபெற்றது. பாரிமுனை தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6:30 மணியளவில், பங்குனி உத்திர கொடியேற்றமும், இரவு அன்னவாகன உற்சவமும் நடந்தன. வரும், 28ம் தேதி காலை, 7:30 மணிக்கு, அதிகார நந்தி உற்சவமும், 30ம் தேதி காலை, 6:00 மணி முதல் 7:30 மணிக்குள்ளாக தேர் உற்சவமும் நடக்க உள்ளது. மண்ணடி லிங்கி செட்டித்தெருவில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவிலில் இன்றும், பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னமல்லீஸ்வரர் கோவிலில் நாளையும், பங்குனி உத்திர கொடியேற்றம் நடக்க உள்ளது.