ராமநாதபுரம் : குயவன்குடி சாது சுப்பையா சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் 6 கால அபிஷேகங்கள், பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ஏப்.,3 அதிகாலை 3 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஏற்பாடுகளை குயவன்குடி பொதுமக்கள், கோயில், விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.