பதிவு செய்த நாள்
25
மார்
2015
12:03
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில், பங்குனி மாதம் கிருத்திகை விழாவில், நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர்.கிருத்திகையை முன்னிட்டு, கோவிலில் மதியம், 12 மணிக்கும் இரவு, 7.30 மணிக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. உச்சி கணபதி மற்றும் பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு பால், தயிர் , இளர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனையும் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* வேலாயுதம்பாளையம், ஐயப்பன் கோவிலில் உள்ள முருகனுக்கும், பாலமலை முருகன் கோவிலிலும், குளிர்ந்த மலை முருகன் கோவிலிலும் கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதிலும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.