பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்ட ஜெ., பேரவை சார்பில், அரும்பாவூர் சிவன் கோணிடலில், 67 பசு மாடுகளை வைத்து, கோ பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, அரும்பாவூர் நகர செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வைத்திலிங்கம், ஏழை பெண்ணுக்கு ஒரு பசு மாட்டை தானமாக வழங்கினார்.நிகழ்ச்சியில், பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சேகர், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.