பதிவு செய்த நாள்
26
மார்
2015
01:03
மணலி: மணலி, பாரதியார் தெருவில் உள்ள திருவுடைநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, வரும் ஏப்.,3ல், நடக்கிறது. அன்று காலை 9:00 மணி அளவில், பாடசாலை தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால்குடம் திருவுடைநாதர் கோவிலுக்கு எடுத்து வரப்படும். பின், முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால் அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, மதியம் 12:00 மணி அளவில், சிவன் - பார்வதிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மதியம் 1:00 மணி அளவில், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.