பதிவு செய்த நாள்
26
மார்
2015
01:03
திருவாலங்காடு: திருத்தணி முருகன் துணை கோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, காலை 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இரவு 8:00 மணிக்கு, சிங்க வாகனத்தில் உற்சவர் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 31ம் தேதி, காலை 10:42 மணிக்கு, கமலத்தேரில் ஸ்ரீசோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில், திருவாலங்காடு பகுதியில் திருவீதியுலா வருகிறார். ஏப்., 1ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, திருக்கல்யாணம், நடராஜர் அபிஷேகம் நடக்கிறது. வரும் 5ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.