பதிவு செய்த நாள்
28
மார்
2015
12:03
பாபநாசம்: பாபநாசம் வட்டாரத்தில் வழிபாட்டு தலங்களில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் துர்கா திருமண மண்டபத்தில், தஞ்சை ஊரக உட்கோட்டம் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட, அனைத்து மத நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், பாபநாசம் டி.எஸ்.பி செல்வராஜ், தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., செல்வராஜ் பேசியதாவது, பாபநாசம் பகுதியில் வழிபாட்டு தலங்களில் விழாக்காலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் போது, தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பெட்டி வடிவ ஒலிபெருக்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு அருகாமையில் உள்ள வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் போது, குழந்தைகள், மாணவர்கள், நோயாளிகள் மட்டும் வயதானவர்களுக்கு இடையூறு இல்லாம்மால் ஒலி அளவை பயன்படுத்து வேண்டும். பிற மதம் மற்றும் இனத்தவரை புண்படுத்தும்படி பேசுதலோ, இசை நாடகம் நடத்துதலோ, ஸ்லோகம் கூறுவது கூடாது. சுவாமி வீதியுலா செல்லும் போது, போலீஸார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் கூறினார். கூட்டத்தில், எஸ்.ஐ க்கள் கலைச்செல்வன், செல்வம், இருதாயராஜ், விஜயலெட்சுமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.