திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கோடங்குடி விநாயகர், மூப்பனார், முருகன், முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 24ம் தேதி காலை 10:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக் கிரக ஹோமம், வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. மாலை 4:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. 25ம் தேதி காலை 9:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி 10 மணிக்கு கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை வைத்தியநாதசுவாமி கோவில் தண்டபாணி குருக்கள் செய்தார்.