Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் பக்தர்கள் 4 மணிநேரம் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவில்: நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில்ஏப். 14ல் சித்திரை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2015
12:03

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும், 5ம் தேதி துவங்குகிறது. சித்திரை தேரோட்டம், ஏப்ரல், 14ம் தேதி நடக்கிறது.திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்து செல்கின்றனர். திருவிழா நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, மாசி மாத கடைசி ஞாயிறு அன்று துவங்கியது. நேற்று, நான்காவது வார பூச்சொரிதல் விழா நடந்தது. சித்திரை தேர் திருவிழா வரை, வாரந்தாறும் ஞாயிற்றுக்கிழமைகளில், பூச்சொரிதல் விழா நடைபெறும்.இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும், 5ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை, 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. திருவிழா துவங்கிய அடுத்தடுத்த நாட்களில் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், ஆகிய வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது.சித்திரை தேரோட்டம் ஏப்ரல், 14ம் தேதி, காலை, 10.30 மணிக்கு நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar