காரைக்கால்: காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் ராம நவமி விழா நடந்தது. காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் ராம நவமி உற்சவத்தையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து திருவாராதனம் அர்ச்சனை, பிஜதானம் ராம ஜனனம் நடந்தது. மாலை ஆராதனம், 7 மணிக்கு சகஸ்ரநாமம அர்ச்சனையுடன் தீபாரதனை நடந்தது. வரும் ஏப்.6ம் தேதி சீதாராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைதம்பி செய்திருந்தனர்.