பேரூர் : ஈஷா தியானலிங்க யோகத் திருகோவிலில், 12ம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா நடந்தது. ஈஷாயோக மையத்தில் உள்ள தியானலிங்கம் 13 அடி 9 அங்குல உயரமுடையது. உலகிலேயே பாதரசத்தை அடிப்படையாக கொண்ட, உயிரோட்டமுள்ள லிங்கங்களில் மிகப்பெரியது இது. தியானலிங்க யோகத் திருக்கோவிலின் 12ம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா, "ஓம் நமசிவாய என்னும் மந்திர உட்சாடணையுடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு மதத்தினரின் சர்வமதப்பாடல் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, மாலை தியானலிங்க கோவிலில் குருபூஜை நடந்தது. இரவு "ஈஷா சம்ஸ்கிருதி குழந் தைகளின் மந்திர உட்சாடணைகளும், ஈஷா இசை குழுவினரின் மத்தள இசைநிகழ்ச்சியும் நடந்தது.