பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
11:06
வேப்பம்பட்டு : பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ள மூலஸ்ரீ அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பெருமாள்பட்டு கிராம மக்கள் சார்பில், மூலஸ்ரீ அம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, கணபதி, மூலஸ்தான விமானம், முருகர், துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் மற்றும் மூலஸ்ரீ அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீஞ்சூர் புனிதபுரியில் உள்ள நாராயண பிருந்தாவன ஆசிரமத்தைச் சேர்ந்த சுதர்சனாச்சாரியார் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், முன்னாள் எம்.எம்.ஏ., முனிரத்தினம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு, விசேஷ புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மூலஸ்ரீ அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. இன்று (27ம் தேதி) முதல், ஜூலை 17ம் தேதி வரை, 21 நாட்களுக்கு மண்டலாபிஷேகமும், ஜூலை 17ம் தேதி, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.