சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் பக்தர் வசித்தார். இவர் தன் மகள் பூம்பாவையை, சம்பந்தருக்கு திருமணம் செய்ய நிச்சயித்தார். ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற அவள், பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச் செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்தார். இதையறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது சிவனுக்கு திருமண உற்ஸவம் நடந்து கொண்டிருந்தது. சாம்பல் கலசத்தை கொண்டு வரச் செய்த சம்பந்தர், பாவைப்பதிகம் பாடினார்.பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள், ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய், என்ற வரிகள் அதில் அமைந்தன. அதாவது எட்டு திசை காவலர்களுக்கும், பலி பீடத்தில் வெள்ளை சாதம் இட்டு, இசைக்கருவிகள் முழங்க மயிலாப்பூரில் பங்குனி உத்திர விழா நடக்கும். இந்த இனிய நிகழ்ச்சியைக் காணாமல் உன் உயிர் எப்படி பிரிந்தது என்று கேட்டார். இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள்.