இறப்புக்கு பின் சுவனம் (சொர்க்கம்) புக வேண்டும் என நினைப்பவர்கள் பெற்றோரைப் பேண வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம்.நாயகத்திடம் இறைவன் கூறும் போது, நபியே! பெற்றோருக்கு நன்றி செய்யும் பிள்ளையிடம், நீ ஒருபோதும் நரகம் செல்லமாட்டாய் என்று கூறும். பெற்றோரை நோவினை செய்யும் பிள்ளையிடம் உன் பெற்றோர் உன்னை மன்னிக்கும் வரை நீ ஒருபோதும் சுவர்க்கம் புகமாட்டாய் என்று கூறும் என்றான்.ஒருமுறை நாயகத்திடம், மனிதச் செயல்களில் சிறந்தவை எவை? எனக் கேட்கப்பட்டது.அதற்கு நாயகம், நேரம் தவறாமல் தொழுவது என்றார். இதற்கு அடுத்த இடத்தை எது பிடிக்கிறது எனக் கேட்டபோது, பெற்றோருக்கு நன்றி உபகாரம் செய்தல் என்றார்.இக்காலத்தில் பெற்றவர்களிடம் பணமிருந்தால் கூட, அவர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லங்களுக்கு விரட்டி அடிக்கும் நிலை இருக்கிறது. பெற்றவர்களை குமுற வைக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு நிச்சயமாக நரகவேதனை காத்திருக்கிறது.