பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில், குண்டம் விழாவில் தீ மிதிக்க, நேற்று காலை முதல் பக்தர்கள் வரிசையில் இடம்பிடிக்க துவங்கினர். சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில், குண்டம் விழா கடந்த, 23ம் தேதி பூசாட்டுதல் நிக ழ்ச்சி மூலம் தொடங்கியது. இதனையடுத்து, கடந்த, 24ம் தேதி ப ண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து, சப்பரம் மூலம் கிராமங்களுக்கு வீதி உலா புறப்பட்டது.சிக்கரசம்பாளையத்தில் துவங்கி புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் சென்று அங்கிருந்து, நேற்று முன்தினம் பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து, வெள்ளியம்பாளையம் புதூருக்கு வந்தது. நேற்று முன்தினம் சத்தியமங்கலம், வடவள்ளி, பட்டரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றுவிட்டு கோவிலை அடைந்தது. பின் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.இந்நிலையில், வரும், 7ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு தீ மிதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் நிற்பதற்காக, மிகப்பெரிய அளவில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளது. நேற்று முதல், இந்த வரிசையில், பக்தர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் கோவிலில் அன்னதானம் சாப்பிட்டுவிட்டு, நாள்தோறும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு, செவ்வாய்கிழமை தீ மிதிப்பதாக கூறினர்.பக்தர்கள் வசதிக்கேற்ப, வெயில் பாதிப்பில் இருந்து பக்தர்களை காக்க, தற்போது தீ மிதிக்க வரிசையாக நிற்கும் பகுதியில், பிளாஸ்டிக் கூரை கொண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து தø லமையில், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.