கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கரூர் கல்யாணபசுபதீஸ்வர கோவிலில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழா மார்ச், 25ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. ஏப்ரல், 7ம் தேதி வரை, 14 நாட்களுக்கு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றம், அம்பாள் திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று, கல்யாண பசுபதிஸ்வரர் ஸ்வாமிக்கும், அலங்காரவல்லி சவுந்திர நாயனிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.