விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பில்லூர் மதுரா பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடக்கிறது. விழாவையொட்டி கடந்த 24ம் தேதி காலை கொடியேற்றம், காப்பு கட்டுதல் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருமண நிகழ்ச்சி, தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது.
தொடர்ந்து இன்று காலை 6:00 மணிக்கு காவடி அபிஷேகம், 7 :00 மணிக்கு காவடி ஊர்வலம், பகல் 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு இடும்பன் பூஜை, இரவு 7:00 சுவாமி வீதியுலா மற்றும் 9:00 மணிக்கு மேல் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடக்கிறது.