பாம்பன் சுவாமி மடாலயத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2015 01:04
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடாலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள ஆறுபடை வீடு பெற்ற ஸ்ரீமன் பாம்பன் சுவாமிகள் மடாலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. விழாவைத் தொடர்ந்து அதிகாலை 4:00 மணிக்கு கருவறை, ஆறுவடை வீடு, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் காவடி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காவடி புறப்பாடு தீபாராதனை நடந்தது. காலை 8:00 முதல் 10:15 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, திருக்கல்யாண விருந்து உபசாரம் நடந்தது. மாலை 4:15 மணிக்கு சுவாமி வீதியுலாவும், இரவு 8:30 மணியளவில் குமாரஸ்தவ அர்ச்சனை, பவுர்ணமி பூஜை தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி பசுபதி மற்றும் பலர் செய்திருந்தனர்.