பாலமேடு :பாலமேடு அருகே தெத்தூரில் வல்லடிகாரசுவாமி, ஏழை காத்தம்மன் சுவாமி, முருகன், கணபதி, நவக்கிரகம் உட்பட விக்கிரகங்கள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.இதையொட்டி கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சி தலைவர் மாரிமுத்து, கவுன்சிலர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. பாலமேட்டில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை நாயுடு உறவின்முறை நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.