பதிவு செய்த நாள்
04
ஏப்
2015
02:04
விழுப்புரம்:விழுப்புரம் செல்வமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் வ.உ.சி., தெருவிலுள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் லட்சுமணன் எம்.பி., தலைமை தாங்கினார். ஆலய நிர்வாகிகள் வெங்கடபதி, வேணுகோபால், நாகராஜ், ரகு, பிரபு, செந்தில்குமார், நரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் பசுபதி, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தங்கசேகர், அபிராமன், ரவிசக்திவேல், மணவாளன், ஆதிலட்சுமி, மார்கண்டேயன், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.