திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு பட்டாபிஷேகம்: இன்று திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2015 11:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று (5ம்தேதி) முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பட்டாபிஷேகத்தில் செங்கோலுடன் சுப்பிரமணியர் சுவாமி தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.