சாயல்குடி : சாயல்குடி அருகே காணிக்கூர் பாதாளகாளியம்மன் கோயில் பவுர்ணமி விளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணியளவில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு விளக்கேற்றிய பின், விளக்கு பூஜை நடந்தது. இதேபோல், பிள்ளையார்குளத்தில் பனையூர் அம்மன் கோயிலில் பவுர்ணமி விளக்கு பூஜை நடந்தது.