பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
02:04
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை ஒட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து கிரிவலம் வந் தனர். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை ஒட்டி, பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் ÷ காபண்ண மன்றாடியார் தலைமையில், 50 பக்தர்கள் பால் குடம் எடுத்து பொன்மலை அடிவாரத்தில் இருந்து கிளம்பி, பொள்ளாச்சி–கோவை மெயி ன்ரோடு வழியாக சிவலோகநாதர் கோவில் வந்து, அங்கு சிவனை வழிபட்டனர். பின், மலையை சுற்றி கிரிவலம் வந்து, மலை மேல் சென்று, ÷ வலாயுதசாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின், சஷ்டி குழுவினர் மற்றும் பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்தனர். தொடர்ந்து, வேலாயுதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பேரூராட்சித் தலைவர் விஜயா கதிர்வேல், சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் திராளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர் ஆகியோர் செய்தனர்.