மும்பாதேவி கோயிலில் அம்பிகை ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள். இங்கே நவராத்திரி நாட்களில் தேங்காய் உடைத்து, அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் அபிஷேகம் செய்கின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக்கொண்டால் குடும்பத்தில் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை.