பதிவு செய்த நாள்
07
ஏப்
2015
01:04
சிற்றம்பாக்கம்: பேரம்பாக்கம் அருகே உள்ள கும்பேஸ்வரர் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பேரம்பாக்கம் அடுத்த, சிற்றம்பாக்கம் கிராமத்திலுள்ளது, குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர் கோவில், இந்த கோவிலில், நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த 3ம் தேதி, காலை 8:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடும், மாலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், அங்குரார்ப்பணமும், தீபாராதனையும் நடந்தன. அதை தொடர்ந்து, ஏப். 4ம் தேதி, மகா கணபதி ஹோமமும், முதல் கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தன. நேற்று, காலை 7:00 மணிக்கு, 4ம் கால யாகசாலை பூஜையும், காலை 9:20 மணிக்கு, கலசங்கள் புறப்பாடும் நடந்தன. அதன் பின், காலை 9:45 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகிய கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு, மகா அபிஷேகமும், மாலை திருக்கல்யாணமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.