உளுந்துார்பேட்டை: திருநாவலுார் பக்த ஜனேஸ்வரர் கோவிலில் சுவாமி மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் மனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவிலில், சுவாமி மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நேற்று நடந்தது. அதனையொட்டி, சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:25 மணி முதல் 6:40 மணி வரை சிவன், பார்வதி ஆகிய சுவாமிகள் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடந்தது.இந்த அற்புத நிகழ்வை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு தரிசனம் செய்தனர். சுவாமி மீது சூரிய ஒளி படும் நிகழ்வு, வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.