ஒரு அன்பர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து,நுண்ணிய அறிவை எனக்கு கற்றுக்கொடுங்கள், என்றார். அடிப்படையான அறிவை வைத்து நீர் என்ன செய்திருக்கிறீர்? என்று அவர்கள் கேட்டார்கள். நீங்கள் கேட்பது எனக்கு புரிய வில்லையே! உம்மைப் படைத்த ஒருவன் இருக்கிறான் என்பது உமக்கு தெரியுமல்லவா? தெரியும் இறைவனுக்காக நீர் என்ன செய்திருக்கிறீர்? கேள்வி கேட்டவர் பதில் சொல்லாமல் தலைகுனிந்தார். நபிகளார் அவரிடம்,மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பது உமக்கு தெரியுமா? தெரியும் இறந்து போக நீர் தயாராக இருக்கிறீரா? மறுமையில் பயன்படக் கூடியவற்றை எல்லாம் சேர்த்து வைத்துக்கொண்டீரா? இதற்கும் அவரிடமிருந்தும் சரியான பதில் இல்லை. நபிகளார் தன்னிடம் கேள்வி கேட்டவரை நோக்கி, முதலில் இந்தப்பணிகளை செய்து முடித்து விட்டு இங்கு வாரும். அதன் பிறகு நுண்ணிய கருத்துக்களைக் கற்றுத் தருகிறேன், என்றார்கள். பார்த்தீர்களா! இறைவனுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும். இறப்புக்குப் பின் மறுமை வாழ்வுக்குரிய நன்மைகளைப் பெற இப்போதே நல்லதைச் செய்ய வேண்டும். செய்யத் துவங்குவோமா இப்போதே!