திருப்பதி; திருப்பதியில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் விஸ்வவாசு சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ் நடைபெற்றது.
மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகின்றனர். வியாச பூஜையுடன் துவங்கிய விழாவானது செப்டம்பர்-07ம் தேதி பாத்ரபத பூர்ணிமையன்று விஸ்வரூப யாத்ரையுடன் நிறைவு பெறுகிறது. விழாவில் இன்று விஸ்வவாசு சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ் துவங்கி ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இன்றைய பூஜையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 140 அக்னிஹோத்ரிகள் பங்கேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜகத்குருக்களின் ஆசி பெற்றனர்.