சிருங்கேரியில் ஆதிசங்கரர் சாரதாம் பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு தேவி படிக்கின்ற கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் சுவடி, ஜபமாலை, கெண்டி, ஞான முத்திரை கொண்டு சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் காட்சி தரும் இவளுக்கு சாரதா நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.