காரைக்கால் அம்மையார் கோவிலில் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2015 11:04
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமானால் ‘அம்மை யே’ அன்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவர். இவரது இயற்பெயர் புனிதவதியார். அம்மையார் ஐக்கிய மாகும் விழா காரைக்கால் அம்மையார் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. அலங்கரித்த வாகனத்தில் காரைக்கால் அம்மையார் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பின், கைலாசநாதர் கோவிலில் நடராஜர் சன்னதியில் காரைக்கால் அம்மையார் எழுந்தருளினார். விளக்குகள் அணைத்து, அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.