செஞ்சி : செஞ்சி அருட்பிரகாச வள்ளலார் கோவில் மகா கும்பாபிஷேகம், 10ம் தேதி நடக்க உள்ளது. செஞ்சி திருவண்ணாமலை ரோடு முல்லை நகரில் புதிதாக திரு அருட்பிரகாச வள்ளலார் அருளாலயம் கட்டி உள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நாளை இரவு 7 மணிக்கு நடுப்பட்டு சங்கத்தினரின் வில்லுப்பாட்டு நடக்க உள்ளது.தொடர்ந்து 10ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவடி புகழ்ச்சி, அகவல் பாராயணம், 7.30 மணிக்கு சன்மாக்க கொடியேற்றம், 7.45 மணிக்கு வள்ளலார் திருவுருவ சிலை திறப்பும், 8.30 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழாவும் நடக்க உள்ளது.தொடர்ந்து 8.45 மணிக்கு திருக்கதவு திறத்தல், 9 மணிக்கு அருட்ஜோதி தரிசனம், 9.15 மணிக்கு அருட்பிரசாத விநியோகமும் நடக்க உள்ளது.விழா ஏற்பாடுகளை சர்தார் சிங் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.