திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தமிழகத்தில் இருந்து திருப்பதி உள்ளிட்ட ஆந்திராவின் நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.