பதிவு செய்த நாள்
08
ஏப்
2015
05:04
ராமநாதபுரம்: ராமகிருஷ்ண சேவா மந்திர் ஆண்டுதோறும் கடந்த பத்து ஆண்டுகளாக கோடைகாலங்களில் மாணவ, மாணவிகளிடத்தே நல்ல சிந்தனைகளை வளர்க்கும் பொருட்டு பண்பாட்டு பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. இவ்வாண்டு மே மாதம் 1,2,3-2015 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இம்முகாமில் சாதுக்களின் ஆசியுரையும், சான்றோர்களின் அறவுரையும், மன ஒருமைப்பாடு, ஞாபகத்திறனை வளர்த்தல் போன்ற பயிற்சிகள் இடம் பெறும். 6 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஏப்ரல் மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிக்குள் விவேகானந்த மாணவர் இல்லத்திற்கு வரவேண்டும். வரும் போது இரண்டு உடை, தட்டு, டம்ளர், துண்டு, சீப்பு, விரிப்பு, பேனா, நோட்டு ஆகியவற்றை கொண்டு வரவும். மே மாதம் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியுடன் முகாம் நிறைவடையும். பெற்றோர் தங்கள் குழந்தைகளையும், ஆசிரியர் தங்கள் மாணவர்களையும் முகாமில் கலந்து கொள்ள செய்து நற்பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மே மாத நிகழ்ச்சிகள்:
இல்லந்தோறும் சத்சங்கம்
நாள்: 17.05.15 ஞாயிறு மாலை 6.00 மணி
இடம்: திருமதி. மரகதம் ராஜேந்திரன் அவர்கள் இல்லம்,
கணபதி பவனம், சி. பிளாக், ராமநாதபுரம்,
அலைபேசி- 9789396823
நிகழ்த்துவோர்: ஆ. சிவராம்
பகவத் கீதை பாராயணம் 9, 16, 23, 30 சனிக்கிழமைகளில்
இடம்: ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண சுவாமி ஆலயம், அழகன்குளம்.
நேரம்: மாலை 7.30 மணி, நிகழ்த்துவோர்: ஆ.சிவராம்.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம்
இடம்: ஸ்ரீபுல்லாணி அம்மன் திருக்கோவில்,
நாள்: 1, 8, 15, 22, 29 வெள்ளிக்கிழமைகளில்
நேரம்: மாலை 6.00 மணி நிகழ்த்துவோர். ஆ. சிவராம்.
விவேகானந்த யுவமிஷன் மாதாந்திரக் கூட்டம்
நாள்: 17.05.2015 ஞாயிறு காலை 10.00 மணி
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்.
நிகழ்த்துவோர்: ஆ. சிவராம்
நரேந்திர பாலபவன் (சிறுவர் சங்க கூட்டம்)
நாள்: 3, 10, 17,24 ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.00 மணி அளவில்
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்,
நிகழ்த்துவோர்: திருமதி. ஏ.பவானிதேவி
ஆ. சிவராம், தலைவர்