பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
12:04
கும்பகோணம்: ""கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு, முதல்கட்டமாக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது, என தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார். கும்பகோணத்தில், 2016ம் ஆண்டு பிப்ரவரி, 22ம் தேதி மகாமக திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்குகு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், தஞ்சை மாவட்ட கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, சுகாதாரப்பணிகள் மற்றும் மருத்துவத் துறை, போலீஸ் துறை உள்ளிட்ட பல அரசு துறை வாரியாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து, அதிகாரிகள், மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.
அதன் பின், கலெக்டர் கூறியதாவது: மகாமக திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளின் வளர்ச்சி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பட்டீஸ்வரத்தில் அமைக்கப்படும் துணை மின் நிலைய பணிகள், வரும் ஜூலை மாதத்தில் முடிவு பெறும் தருவாயில் உள்ளது. அப்பணிகள் முடிவுற்றவுடன் கும்பகோணம் நகரில் உள்ள மின் அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், கும்பகோணம் காவேரி ஆற்றின் குறுக்கே, புதிதாக பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அறலையத்துறை சார்பில், கும்ப கோணத்தில் உள்ள கோவில்களில் திருப்பணி நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் குறிப்பிட்ட காலத்தி ற்குள் திட்டமிட்டப்படி முடிக்கப் பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அனைத்து துறைகள் சார்பிலம், 260 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், 100 கோடி தியை பெற்று, பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார். கும்பகோணம் உதவி கலெக்டர் கோவிந்தராவ் உடனிருந்தார்.