பாபநாசம்: பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில், 121ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, முக்கிய வீதிகளின் வழியாக குருத்தோலை பவனி வந்து ஆலயத்தை அடைந்தது. கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளர் பிலிப் சந்தியாகு தலைமையில் திருவழிபாடு நடந்தது. பாபநாசம் இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருப்பலியும், இரவு ஆடம்பர தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடந்தது. பாபநாசம் மேலவீதியில் பூப்போடும் நிகழ்ச்சியும் நடந்தது.