பிரதோஷ காலத்தில் இடப வாகனத்தில் கோயிலின் உள்ளேயே வலம்வந்து உலாக்காணும் பிரதோஷ மூர்த்தி: மாதப்பிறப்பு, சிவராத்திரி, விஜயதசமி, பார்வேட்டை போன்ற சமயங்களில் உலாவரும் சந்திரசேகர மூர்த்தி: கொடியேற்றி செய்யப்படும் பெருந்திருவிழாவின்போது உலாவரும் சோமாஸ்கந்த மூர்த்தி, மார்கழி திருவாதிரை பெருந்திருவிழாவின் இறுதிநாளான தீர்த்தவாரியின்போது உலாவரும் நடராஜப் பெருமான்; பெரும் திருவிழாக்காலத்தில் உலாவரும் பிட்சாடன மூர்த்தி ஆகிய ஐந்து திருக்கோலங்களும் மிக முக்கியமான உலாத் திருக்கோலங்களாகத் திகழ்கின்றன.