திரிபுராதிகளை வென்ற ஈஸ்வரன் அவர்களுள் இருவரை வாயிற்காவலர்களாகவும் ஒருவனை குடமுழா இசைப்போனாகவும் கொண்டார் என புராணங்கள் கூறுகின்றன. இந்த வாத்தியக்கருவியின் ஐந்து முகங்களும் ஈசனின் ஐந்து முகங்களைக் குறிக்கும் என்பர். குடமுழா வாசிக்கும் நந்தி கணத்தைச் சேர்ந்த ஒருவரே மாணிக்கவாசகராக அவதரித்தார் என்பர்.