கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புகழிமலை முருகனை தரிசிக்க 354 படிகள் ஏறிச் செல்ல வேண்டும் வழியில் ஒரு குன்றின் மேல் குரங்கு ஒன்று வாழைப்பழத்தைத் தின்பது போன்ற சிலை உள்ளது. பக்தர்கள், தங்கள் வேண்டுதலை ஒரு சீட்டில் எழுதி நூலில் கட்டி, இதன் கழுத்தில் அணிவிக்கின்றனர். இதனால் விரைவில் கோரிக்கை, ஈடேறும் என்கிறன்றனர். சஷ்டி தினத்தன்றும், செவ்வாய்க் கிழமைகளிலும் பெண்கள் விரதமிருந்து படிகளில் மண்டியிட்டுக் ஏறி, குழந்தை வரம் வேண்டி பிரார்த்திக்கின்றனர்.