திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணிக்கை, கோயில் துணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் நடந்தது. இக்கோயிலில் ஜூன் 9ல் உண்டியல்கள் எண்ணப்பட்டன. 25 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 2 கிரிவல பாதை உண்டியல்களில் 9.81 லட்சம் ரூபாய், 170 கிராம் தங்கம், 290 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டது. மதுரை உதவி ஆணையர் ராமச்சந்திரன், கோயில் பணியாளர்கள், சுப்பிரமணியசுவாமி கோயில் தேவஸ்தான பள்ளி மாணவிகள், வேதசிவாகம பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.