செஞ்சி: செஞ்சியில் அருட்பிரகாச வள்ளலார் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. செஞ்சி திருவண்ணாமலை ரோடு முல்லை நகரில் புதிதாக திரு அருட்பிரகாச வள்ளலார் அருளாலயம் கட்டி உள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு கடந்த 9ம்தேதி இரவு 7 மணிக்கு நடுப்பட்டு சங்கத்தினரின் வில்லுப்பாட்டு நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவடி புகழ்ச்சி, அகவல் பாராயணம் நடந்தது. தொடர்ந்து 8: 20 மணிக்கு சன்மாக்க கொடியேற்றமும், 8: 40 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து வள்ளலார் திருவுருவ சிலை திறப்பும், திருக்கதவு திறத்தல், அருட்ஜோதி தரிசனம் நடந்தது. செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான், முன்னாள் துணை தலைவர் அரங்க ஏழுமலை, தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பணிக்குழு தலைவர் சர்தார்சிங் தலைமையில் சன்மார்க்க அன்பர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.