விழுப்புரம்: பல்லக்கச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில், பங்குனி மாத உற்சவம் நாளை நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த பல்லக்கச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில், பங்குனி மாத உற்சவம் மற்றும் திருக்கல்யாணம் நாளை (12ம் தேதி) நடக்கிறது. காலை 9:30 மணிக்கு திருமஞ்சனம், மதியம் 12:00 மணிக்கு சாத்துமுறையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பல்லக்கச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில் கைங்கர்ய நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.