பதிவு செய்த நாள்
11
ஏப்
2015
12:04
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இண்டூரில் விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி, பென்னாகரம் சாலை, இண்டூர் அடுத்த குப்புசெட்டிப்பட்டியில், 31 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பிரவேஷத்துடன் துவங்கியது.
நேற்று காலை 6.30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானமும், 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. தர்மபுரி, பாரதிபுரம் சிவசரவண சுவாமிகள் தலைமையில், பட்டாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவை நடத்தினர். தொடர்ந்து ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.