பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
கோத்தகிரி : கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள சக் கத்தா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கோலாகலமாக நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து, 7ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, அம்மன் ஊர்வலம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. 8ம் தேதி காலை 9:30 மணிக்கு, கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து அம்மன் முக்கிய வீதிகள் வழியாக, வண்ணக்குடைகளின் கீழ், திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில், சக்கத்தா சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், பஜனை, ஆடல் பாடல் மற்றும் ஆன்மீக சொற் பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழா நிறைவு நாளான நேற்று, மறுப்பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஊர் பிரமுகர் பெள்ளிராஜ் தலைமையில், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.