பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
பெங்களூரு :பெங்களூரு, வண்ணையம்பதி தேவி கருமாரியம்மன் கோவிலில், இன்று முதல், 15ம் தேதி வரை, கரகம் மற்றும் தேர் பவனி நடக்கின்றன. பெங்களூரு, விவேக் நகர், வண்ணையம்பதி பஸ் நிலையம் அருகில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், சித்திரை மற்றும் குலதெய்வ திருவிழா, தமிழ் புத்தாண்டு விழா இன்று துவங்குகின்றன.இன்று மாலை, 6:30 மணிக்கு, தியாகராஜ சிவாச்சாரியார் தலைமையில், சிறப்பு ஹோமம், யாக பூஜைகள் நடக்கின்றன. இரவு, 7:45 மணிக்கு நாகேஷ் மற்றும் குழுவினரின் பரத நாட்டியம் இடம் பெறுகின்றன.நாளை, 14ம் தேதி, காலை, 7:00 மணிக்கு தேவி கருமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. இதை செய்ய விரும்புகின்றவர்கள், 50 ரூபாய் கொடுத்து, கோவில் நிர்வாகிகளிடம் ரசீது பெற்றுக்கொள்ளலாம்.மாலை, மஞ்சள் புடவை அணிந்து, தாங்களே பால் குடம் எடுத்து வந்து, தங்கள் கையால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.அன்று காலை, 11 மணிக்கு ஹலசூரு குமார் குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. மாலை, 6:30 மணிக்கு பாஸ்கர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, இரவு, 9:30 மணிக்கு ஹரீஸ் கரக ஊர்வலம் நடக்கின்றன. இரவு, 10:00 மணிக்கு அம்மன் தேர் பவனி வருகிறது.